நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பக்கிச் சூடு சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் விளக்கமறியல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று(02) யாழ். நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே இவ்உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேசத்தில் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவரின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.