நீதிமன்ற உத்தரவினை மீறிய ஹம்பாந்தோட்ட ஆர்ப்பாட்டம் – குறித்த தரப்பினருக்கு பொலிஸ் அழைப்பு..

கூட்டு எதிர்கட்சியினரின் ஹம்பாந்தோட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு இன்றும்(09) நாளையும்(10) ஹம்பாந்தோட்ட பொலிசுக்கு சமூகமளிக்குமாறு குறித்த தரப்பினருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல் மாகாண சபை உறுப்பினர் உபாலி கொடிகார, தென் மாகாண சபை உறுப்பினர் சம்பத் அதுகோரல, தேசத்துக்கான இராணுவ வீரர்கள் அமைப்பின் ஏற்பாட்டாளர் அஜித் பிரசன்ன ஆகியோரும் இன்று(09) பொலிசுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவை மீறி கடந்த 06ம் திகதி ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டமை குறித்து விசாரணை மேற்கொள்ள பல பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)