நீதிமன்ற உத்தரவுகளை குப்பைத் தொட்டியில் வீசியவரே மகிந்த ராஜபக்ச என அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அப்போதைய ஆட்சி காலத்தில் நீதிமன்ற உத்தரவுகளை மகிந்த குப்பையில் வீசினார். நீதிமன்றத்தின் உத்தரவுகளை மகிந்த ராஜபக்ச மதித்து செயற்பட வில்லை.
ஆனாலும் நாம் அவ்வாறு நடந்து கொள்வதில்லை நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்கும் ஆட்சி இப்போது நடந்து கொண்டிருக்கின்றது என விஜயதாச தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச எதிர் கருத்து தெரிவிக்கையில்,
விமல் வீரவங்சவை சிறையில் அடைந்து விட்டு லசந்த அழகியவண்னவை வெளியே சுதந்திரமாக விட்டு வைப்பது தான் உங்கள் நீதியா?
இருவருக்கும் ஒரே தண்டனைத் தானே கொடுக்க வேண்டும் அவ்வாறு செய்யவில்லையே, இதில் இருந்தே உங்கள் நீதி தெரிந்து விடுகின்றதே என விமல் குற்றம் சுமத்தினார்.
அதற்கு விஜயதாச “உங்கள் கேள்விக்கு நலிந்த ஜயதிஸ்ச பதில் தருவார் அவரிடம் அதற்கான பதிலை கேட்டுக் கொள்ளுங்கள் என நகைப்புரிய பதிலைக் கொடுத்து விட்டு ஆசனத்தில் அமர்ந்தார்.
அதற்கு “ என்னை வீண் பிரச்சினையில் சிக்கவைத்து விடாதீர்கள், நான் அதற்கு சம்பந்தப்பட வில்லை” என நலிந்த ஜயதிஸ்ச பதில் அளித்தமை குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து சபையில் காரசாரமான விவாதங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதோது, சலசலப்பு நிலையும் தோன்றியது.