பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் நவாஸ் ஷெரீபின் உறவினர்கள் ஈடுபட்டு ஆதாயம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கொன்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையின் முடிவில் இன்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பை குற்றவாளியாக கண்டு அவர் பாராளுமன்றத்தில் உறுப்பினர் பதவி வகிப்பதற்கு தகுதி அற்றவர் எனவும் அதனால் பிரதமர் பதவியிலிருந்து அவரை தகுதி நீக்கம் செய்வதாகவும் அறிவித்தது.
அதை தொடர்ந்து பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சரின் ஆலோனைக்கமைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தனது பதவியிளுருந்து இன்று இராஜினாமா செய்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சகல இடங்களையும் அபிவிருத்தி செய்வதற்கான நிதியை வழங்குவதற்குரிய மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.…
10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பாடசாலைகளில் தரம் 6 க்கும் 11க்கும் இடைப்பட்ட வகுப்புக்களில் கற்பித்த 5473 ஆசிரியர்களுக்கு இம்மாதம் இறுதிப்பகுதியில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளது. மூன்று கட்டங்களின்…