நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் நவம்பர் 12ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
சிறு குற்றங்களுக்கும் பாரியளவிலான தண்டனைகள் வழங்கப்படுவதாக கொழும்பு மற்றும் தங்காலை நீதிமன்றங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்ற அழைப்பாணை மூலம் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் நவம்பர் 12ம் திகதி அவர் குறித்த அறிக்கையுடன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் மட்டுமன்றி கடுவலை போன்ற நீதிமன்றங்களில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கருணை அடிப்படையிலான தண்டனைகளும், சிறு குற்றச்செயல்களுக்கு கடுமையான தண்டனைகளும் விதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.