நீரிழிவு நோயாளிகள் இதை தாராளமாக சாப்பிடலாம்…

நீரிழிவு நோயாளிகள் இதை தாராளமாக சாப்பிடலாம். இது இரத்த சர்க்கரை அளவை உயர்த்தாது.

நன்மை 1:
சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் மிகுதியான நன்மை என்று பார்த்தல், அதில் இருக்கும் நார்ச்சத்து, மினரல் சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்கள் தான். இவை அனைத்தும் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அதிகமாக உடலில் சேராமல் தவிர்க்க பயனளிக்கின்றன.

2: சர்க்கரைவள்ளி பெயரிலேயே சர்க்கரை கொண்டுள்ளதால், இதை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா, கூடாத என யோசிக்க வேண்டாம். நீரிழிவு நோயாளிகள் இதை தாராளமாக சாப்பிடலாம். இது இரத்த சர்க்கரை அளவை உயர்த்தாது.

3: சர்க்கரைவள்ளி கிழங்கில் பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம் போன்ற மினரல் சத்துக்கள் இருக்கின்றன. இவை நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் ஆகும். மேலும், இவை புற்றுநோய் கட்டிகள் உடலில் உருவாகாமல் தடுத்து பாதுகாக்கிறது.

4: சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் வைட்டமின் ஏ கண் பார்வைக்கு மிகவும் நல்லது. மேலும் சர்க்கரைவள்ளி கிழங்கில் பி 1, பி5, பி6 சத்துக்களும் இருக்கின்றன. இவை உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கின்றன.

பக்கவிளைவு:
1 சர்க்கரைவள்ளி கிழங்கை பச்சையாக அதிகம் சாப்பிட்டால் இதில் இருக்கும் சில மூலக்கூறுகள் புரதத்தை செரிமானம் செய்வதில் சிக்கலை ஏற்படுத்திவிடும். எனவே, அளவாக உண்பதே சரி.

2 மேலும், பச்சையாக சர்க்கரைவள்ளி கிழங்கை அதிகம் உண்பதால் வாயுத்தொல்லை அதிகரிக்கலாம். எனவே, இதை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.