(FASTNEWS|COLOMBO) – பம்புக்குளிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக நீர்கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று(03) இரவு 12 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், கொச்சிக்கடை, தூவ, பிட்டிபன, பாசியாவத்த, துல்கல்பிட்டிய, பமுனுகம, கட்டான, கட்டுநாயக்க முதலீட்டு வலயம், கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் கட்டுநாயக்க விமானப்படை முகாம்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.