நீர்கொழும்பு மற்றும் கட்டுநாயக்க ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவை இன்று(14) காலை 8.35 மணி முதல் மறுநாள் (15) இரவு 8.00 மணி வரையிலான காலப்பகுதியில் இடம்பெற மாட்டாது என ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.
புத்தளம் ரயில் பாதையில் குரண – நீர்கொழும்பு நிலையங்களுக்கு இடையிலுள்ள ரயில் பாதையை இருவழிப் போக்குவரத்தாக மாற்றுவதற்கான நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருவதனால் குறித்த இந்த போக்குவரத்து மட்டுப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இக்காலப் பகுதியில் கொழும்பிலிருந்து கட்டுநாயக்க வரை ரயில் சேவை இடம்பெறும். அத்துடன், புத்தளம், சிலாபம் ஆகிய பிரதேசங்களிலிருந்து வரும் ரயில்கள் நீர்கொழும்பு வரையில் மட்டுப்படுத்தப்படும் எனவும் கூறப்படுகின்றது.
(rizmira)