நீர்க்கட்டண அதிகரிப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் ஏதேச்சாதிகார போக்கில் திடீரென குடி நீருக்கான கட்டணம் உயர்த்தப்பட்டமை ஒட்டுமொத்த மக்களினதும் அடிப்படை மீறலாகும் எனவும் சட்டவிரோதமானது எனவும் நீர்வழங்கல் மற்றும் நீர் விநியோக முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
குறித்த நீர்க் கட்டணத்தை உயர்த்துவதற்கு திறைசேரியின் அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் நீர்க் கட்டணங்கள் உயர்த்தப்பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இலவச கல்வி சுகாதாரம் மற்றும் நீர் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கான ஒதுக்கங்கள் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, நீர்க் கட்டணத்தை உயர்த்துவது நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அணுகுமுறை முற்றிலும் தவறானது.மிலேனிய அபிவிருத்தி இலக்குகளில் இலங்கையும் கையொப்பமிட்டுள்ள நிலையில் இவ்வாறு நீர்க்கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
குடிநீர் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்ட ஓர் விடயம் எனவும் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக மட்டும் நீர் கட்டணத்தை உயர்த்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.