மேலதிக கொடுப்பனவு தொகை குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட போவதாக நீர்வழங்கல் தொழிற்சங்க ஒன்றியத்தின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நாளை மற்றும் நாளை மறுதினம் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட போவதாக அந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உபாலி ரத்ணாயக்க தெரிவித்தார்.
அதன்படி மேலதிக நேர வேலை மற்றும் வார இறுதி நாட்களில் இடம்பெறும் வேலை நேர மாற்றங்களில் இருந்து தவிர்ந்து கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் 28ம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணி முதல் நண்பனல் 12 மணி வரை அலுவலக வேலைகளை தவிர்த்து பரந்தளவிலான வேலை நிறுத்தத்தை மேற்கொள்வதாக உபாலி ரத்ணாயக்க தெரிவித்தார்.
குறித்த நேரத்தில் கட்டணப் பட்டியல் வழங்கள் மற்றும் கட்டணங்கள் செலுத்துதல் போன்ற அனைத்து வாடிக்கையாளர் சேவைகளில் இருந்தும் தவிர்ந்து இருப்பதாக அவர் கூறினார்.
இதன் மூலம் குறைக்கப்பட்ட மேலதிக கொடுப்பனவுகள் மீள வழங்கப்படாவிட்டால், மீண்டும் வழங்கும் வரை தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.