நீர் கட்டணத்தை அதிகரிக்க நகர திட்டமிடல் மற்றும் நீர் வளங்கள் அமைச்சு திட்டம்…

எதிர்காலத்தில் நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வளங்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

குருநாகல் பிரதேசத்தில் நேற்று(20) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சுத்திகரிக்கப்பட்ட 1000L நீரை 12 ரூபாவுக்கு வழங்கப்படுகின்றது. இதற்காக 48 ரூபா செலவாகிறது.

ஆனால், நான்கில் ஒரு பங்கு மட்டுமே அறவிடப்படுகின்றது. தொடர்ச்சியாக இதை செய்ய முடியாது.

சிறு அளவில் கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும். திறைசேரியிலிருந்து பணம் கிடைப்பதில்லை. கடன்களைப் பெறுவதனூடாக இது முன்னெடுக்கப்படுகின்றது.

எனவே, கடனை செலுத்துவதற்காக சிறிய அளவில் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்.

ஆனால், சமுர்த்தி பயனாளிகளுக்கு நீர் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.