நீர் கட்டண சீர்திருத்தல் தொடர்பில் ஆராயும் பொருட்டு தற்போது விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக, நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கள் அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நீர் கட்டணம் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மறுசீரமைக்கப்பட வேண்டிய நிலையில், கடந்த ஆறு வருடங்களாக நீர் கட்டணம் சீர்த்திருத்தம் செய்யப்படவில்லை. இந்நிலையிலேயே அதுகுறித்து ஆராய்வதற்காக குறித்த இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.