நீர் மின் உற்பத்தி 50% ஆல் அதிகரிப்பு

அண்மைக்காலமாக கிடைக்கப் பெற்ற அதிக மழைவீழ்ச்சி காரணமாக நீர் மின் உற்பத்திக்கு போதியளவு நீர் கிடைத்துள்ளதாக மின்வலுத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தெரிவித்துள்ளார்.

நீரேந்து பிரதேசங்களில் அமைந்துள்ள நீர் நிலைகளுக்கு கனிசமானளவு நீர் கிடைத்துள்ளது.

அண்ணளவாக 75 வீதமான நீர் நிலைகளில் தற்போது தேங்கியுள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில் சில நீரேந்து பிரதேசங்களில் நீர் மிகவும் குறைந்த அளவிலேயே இருந்தது.

இந்நிலையில், நாட்டின் மொத்த மின்சார தேவையின்  அரைவாசியளவு நீர் மின் உற்பத்தி நிலையங்களின் ஊடாக உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது என அமைச்சர் தொடர்ந்தும் கூறியுள்ளார்.