தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை பலப்படுத்தும் முகமாக இன்று(04) முதல் நாடு முழுவதும் உள்ள ஊழியர்கள் சேவையில் ஈடுபடாதிருக்க தீர்மானித்துள்ளதாக அச்சங்கத்தின் ஏற்பாட்டாளரும் பொறியியலாளருமான உபாலி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன்வைத்தே குறித்த இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.