நீர் விநியோகம் தடை

பியகம நீர் விநியோக மத்திய நிலையத்தில் மின்சாரம் தடைப்பட்டதன் காரணமாக கொழும்பு வடக்கு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

அதற்கமைய இன்று (14) காலை 8 மணிமுதல் 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கின்றது.

வத்தளை , பேலியகொட , ஜாஎல , கட்டுநாயக்க மற்றும் சீதுவ ஆகிய நகரங்களை அண்மித்த பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

மேலும் களனி ,ஹெந்தலை , தொம்ப்பே , பியகம ,மல்வானை , நீர் விநியோகம் தடைப்படும எனவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கின்றது.