நுகர்வோருக்காக பாண் விலை மீண்டும் குறைந்தது

நுகர்வோர் வாரத்தினை முன்னிட்டு பாண் விலையில் மாற்றத்தினை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் பிற்பாடு ரூ.54ற்கு விற்கப்படும் 450கிராம் பாண் ஒன்றின் விலையானது ரூ.50ற்கு தற்காலிகமாக விற்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினால் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தது.

மேற்குறித்த விலையானது எதிர்வரும் 14ம் திகதி திங்கள் முதல் 20ம் திகதி வரையிலும் குறித்த விலைக்கு பாண் ஒன்றினை கொள்வனவு செய்யமுடியும் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நுகர்வோர் சேவை வாரத்தில் நுகர்வோருக்கு நிவாரணமளிக்கவே குறித்த திட்டம் முன்வைக்கப்பட்டதாகவும் குறித்த சங்கமானது தெரிவிக்கின்றது.