நுகேகொடை மற்றும் தெஹிவளை அண்மித்த பகுதிகளில் வாகன போக்குவரத்து ஒத்திகை..

மேம்பாலத்திற்கு அண்மித்த பகுதியில் வாகன போக்குவரத்து ஒத்திகை ஒன்றை மேற்கொள்வதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

நாளை(25) முதல் 28ம் திகதி வரை அந்த ஒத்திகை மேற்கொள்ளப்பட உள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அந்நாட்களில் நுகேகொடை மற்றும் தெஹிவளை மேம்பாலத்தில் 07 மணி முதல் காலை 08 மணி வரை கொழும்பு நோக்கி செல்லும் வாகனங்கள் மாத்திரம் அனுமதிக்கப்பட உள்ளன.

மாலை 5.30 மணிமுதல் 6.30 மணி வரையான காலத்தில் கொழும்பில் இருந்து வெளிச்செல்லும் வாகனங்கள் மாத்திரம் மேம்பாலத்தினூடாக செல்வதற்கு அனுமதிக்கப்படும் என்றும் பொலிஸர் தெரிவித்துள்ளனர்.