நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையம் கடந்த 2 வாரகாலமாக செயலிழந்திருந்தது.
இதில் ஒரு இயந்திரம் இன்று(20) இரவு முதல் மீண்டும் வழமைபோன்று செயற்படவுள்ளது. இதனால் 300 மெகாவோட்ஸ் மின்சாரம் தேசிய மின்வலைப்பின்னலுடன் ஒன்றிணைக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் நிலைபேறான அமைச்சின் ஊடகப்பேச்சாளர் லக்ஸ்மன் ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
திருத்தல் மற்றும் புதுப்பித்தல் நடவடிக்கைகளுக்காக இரண்டு இயந்திரங்களின் மூலமான மின்உற்பத்தி நவம்பர் மாதம் 1ஆம் திகதியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இதில் ஒரு இயந்திரம் தற்பொழுது மீண்டும் செயற்படக்கூடியதாக அமைந்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்