நுளம்புகள் வளரும் வகையில் சூழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக 25,000 ரூபாவை தண்டப்பண யோசனை…

நுளம்புகள் வளரும் வகையில் சூழலை  வைத்திருப்பவர்களுக்கு எதிராக 25,000 ரூபாவை அபராதப் பணமாக விதிக்க திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

டெங்கு நோயை இல்லாதொழிக்க வேண்டுமாயின் குறித்த சட்டம் கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் கூறியுள்ளார்.

ஒரு பகுதியிலிருந்து டெங்கு நோய் காரணமாக ஒருவர் உயிரிழந்தார் என்றால், டெங்கு நுளம்பு குடம்பியை பரவலடையச் செய்தவர் அல்லது குறித்த பகுதியில் நிறுவனம் வைத்திருப்பவர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ராஜித குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த வருடத்தில் டெங்கு நோய் காரணமாக 47,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 76 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட நிபுணர் வைத்தியர் பிரிசி ல்லா சமரவீர தெரிவித்துள்ளார்.

டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சி திட்டம் டிசம்பர் 07ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு விசேட நிபுணர் கூறியுள்ளார்.

நுளம்பு பெருக்கத்திற்கு ஏற்ற சூழலை கொண்டிருப்பவர்களுக்கு, தற்போது 500 ரூபா முதல் 2000 ரூபா வரையில் அபராதம் விதிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.