(FASTNEWS|COLOMBO) – நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நுவரெலியா வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத் தொகுதி ஒன்று மக்கள் பாவனைக்கு இன்று(15) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கையளிக்கப்பட்டது.
07 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் 5 மாடிகளைக் கொண்ட இந்த கட்டிட தொகுதியில் நவீன முறையிலான கட்டில்கள், சத்திர சிகிச்சை நிலையங்கள், அவசர சிகிச்சை பிரிவு, மின்தூக்கி வசதிகள் உட்பட பல வசதிகள் இக்கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.