வட மாகாண சபையின் அரசியல் அதிகாரத்திலுள்ளவர்கள் 250 இந்திய குடும்பங்களை வட மாகாணத்தின் கிராமமான நெடுங்கேணியில் குடியமர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்குப்புறம்பானதென அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், இந்தியாவிற்கு யுத்தத்தின் போது அகதிகளாக சென்ற 10,675 இலங்கைப் பிரஜைகள் இன்று வரை தமது சொந்த விருப்பத்தின் பேரில் இலங்கைக்கு நாடு திரும்பியுள்ளனர். இந்த அனைத்து நபர்களும் இலங்கைப் பிரஜைகள் ஆவதுடன், அவர்களது குடியுரிமை நிலை முறையாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன கையெப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.