“நெத்த வேனுவட்ட எத்த” – விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவுக்கு எதிரான வழக்கை இன்று(21) கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக “நெத்த வேனுவட்ட எத்த” என்ற சிங்கள நூல் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தொடர்ந்திருந்த வழக்கே இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதியான விமல் வீரவங்சவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நாடாளுமன்ற கூட்டம் நடைபெறும் தினம் என்பதால் வழக்கு விசாரணையை வேறு ஒரு திகதிக்கு ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதன் அடிப்படையில் வழக்கை மார்ச் 10 மற்றும் 15 திகதிகளில் விசாரணைக்கு எடுப்பதாக கொழும்பு வணிக மேல் நீதிமன்ற நீதிபதி சிரான் குணரத்ன அறிவித்தார்.

மேலும், விமல் வீரவங்சவினுடைய நூலில், மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபைக்குரிய ஆவணங்களை அனுமதியின்றி உள்ளடக்கியிருப்பதன் மூலம் புலமைச் சொத்தை திருடியுள்ளார்.

இதற்காக 10 மில்லியன் இழப்பீட்டை பெற்றுத் தர வேண்டும் என முறைப்பாட்டாளரான ரில்வின் சில்வா நீதிமன்றத்திடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.