நெல் தொடர்பான பகிரங்க விவாதத்திற்கு ஹெரிசனுக்கு அழைப்பு

நெல் தொடர்பான பகிரங்க விவாதத்திற்கு வருமாறு விவசாய அமைச்சர் ஹெரிசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பை அகில இலங்கை விவசாயிகள் சம்மேளத்தின் ஏற்பாட்டாளர் நாமல் கருனாரத்ன விடுத்துள்ளார்.

நெல் சந்தைப்படுத்தலின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பான விவாதத்திற்கு தான் எப்பொழுதும் தயாராக இருப்பதாக அண்மையில் அமைச்சர் ஹெரிசன் அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்திடம் சவால் விடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை எங்களது இந்தச் சவாலை அமைச்சரால் ஏற்க முடியவில்லை என்றால் அரசாங்கத்தின் வேறு அமைச்சர்களும் எங்கள் சம்மேளத்தின் சவாலை ஏற்று விவாதத்திற்கு வரலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல்லானது களஞ்சியப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் போது சந்தைப்படுத்தல் சபைக்கு முரணாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ் சுமத்தியுள்ளார்.