நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையினால் 21 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளனதுடன் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இன்று (13) பலியானவர்கள் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றன
வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நேபாள நாட்டின் உள்துறை அமைச்சகம் நேற்று(12) தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.