நேபாளத்தில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி கடந்த 20 நாட்களில் 90 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை(2) தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
நாடு முழுவதும் இயற்கைச் சீற்றம் காரணமாக 117 வீடுகள், 4 பாலங்கள், 5 தொங்கு பாலங்கள், ஒரு பள்ளிக் கட்டடம் ஆகியவை சேதமடைந்தன.
பருவ மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்திலும், நிலச்சரிவுகளிலும் சிக்கி 90 பேர் உயிரிழந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(riz)