அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளவர்கள் கலந்து கொண்ட நேரடி விவாதத்தின் போது, டொனால்டு டிரம்பின் குடியுரிமை தொடர்பான கொள்கை அதிகம் விமர்சனத்திற்குள்ளானது.
இந்த விவாதத்தின் போது பேசிய நியூயார்க்கைச் சேர்ந்த தொழிலதிபரும், குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளவர்களி்ல் அதிக ஆதரவைப் பெற்றவருமான டொனால்டு டிரம்ப், அமெரிக்கா, மெக்சிகோ இடையே தடுப்புச் சுவர் கட்டப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இத்தகைய தடுப்புச் சுவர் கட்டும் நடவடிக்கையில் இஸ்ரேல் வெற்றி பெற்றுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளவர்கள் அனைவரும் நாடுகடத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இதனை விமர்சித்த ஜெப் புஷ், இது சரியான வாதம் இல்லை என்றும் நடைமுறைக்கு ஒத்துவராத விடயம் குறித்துப் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இத்தகைய வாதங்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.