நேற்று 597 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கையானது 43,299 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் நேற்று கொவிட்-19 நோயுடன் அடையாளம் காணப்பட்ட 597 பேரில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

இவ்வாறு புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 526 பேர் பேலியகொட – மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

ஏனைய 66 பேர் சிறைச்சாலை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்பதுடன் 5 பேர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் ஆவர்.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,329 ஆக உயர்வடைந்துள்ளது.

இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 201 ஆக பதிவாகியுள்ளது.