நேவி சம்பத் தொடர்ந்தும் விளக்கமறியலில்…

2008 – 2009 காலப்பகுதியில் மாணவர்கள் உட்பட 11பேரைக் கொழும்பில் கடத்திச் சென்று காணமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படை லெப்டினன்ட் கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டி ஆரச்சியை (நேவி சம்பத்) எதிர்வரும் 10ம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று(26) கோட்டை நீதிவான் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.