என்னதான் சாப்பிட்டாலும் உடல் எடை கூடவேயில்லை என்பதை பலர் கூற கேட்டிருப்போம்.
இவ்வாறு உடல் எடை குறைவாக உள்ளவர்கள் உடல் எடையை அதிகரிக்க உதவும் சில உணவு வகைகளை இங்கே காணலாம். இதன் மூலம் உடல் எடை அதிகரித்து அழகான உடலமைப்பை பெறுங்கள்…
உலர் திராட்சை

இதில் 99 கலோரிகள் அடங்கியுள்ளது. ஒரு கைப்பிடி உட்கொண்டால் உடலில் ஆரோக்கியமான கலோரிகள் சேர்வதோடு, நார்ச்சத்தும் தேங்கும். மேலும் உடலில் உள்ள கேட்ட கொழுப்பை குறைத்து உடல் எடையை அதிகரிக்கும்.
வாழைப்பழம்

உடல் எடை வேகமாக கூட வேண்டுமெனில், ஒரு நாளைக்கு 2 அல்லது 3 வாழைப்பழங்கள் சாப்பிட வேண்டும். வாழைப்பழத்தில் உள்ள கலப்புசீனியும், பழவெல்லமும் உடனடி சக்தியை அளிப்பதோடு, உடல் எடையையும் அதிகரிக்கும்.
முட்டை

உடல் எடையை அதிகரிக்க வளமான புரதசத்து மற்றும் அமினோ அமிலங்களை உள்ள முட்டைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதுவும் முட்டையின் மஞ்சள் கருவில் அதிக அளவில் நல்ல கலோரிகள் நிறைந்துள்ளதால் ஒரு நாளைக்கு 2 முட்டைகளை சாப்பிட வேண்டும்.
உருளை கிழங்கு

உருளைக்கிழங்கில் போதுமான அளவு கார்போஹைடிரேட் மற்றும் கலப்புசீனி உள்ளது. இதை உணவில் அதிக அளவு பயன்படுத்தினால் சத்தான கொழுப்பு உடலில் படியும்.