நோர்வே செஸ்: விஸ்வநாதன் ஆனந்த் 5ஆவது இடம்

நோர்வேயின் ஸ்டாவன்கர் நகரில் செஸ் தொடர் நடக்கிறது. இதில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ‘உலக சாம்பியன்’ நோர்வேயின் கார்ல்சன் உள்ளிட்ட 10 முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர்.

முதலில் வேகமான முறையில் நகர்த்தப்படும் (பிளிட்ஸ்) முறையில் போட்டிகள் நடந்தன. இதன் தொடக்கத்தில் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற ஆனந்த், 6வது போட்டியில் கார்ல்சனிடம் வீழ்ந்தது பெரும் பின்னடைவாக போனது.

நேற்று நடந்த 9வது மற்றும் கடைசி சுற்றில் அமெரிக்காவின் நகமுராவை சந்தித்தார். 19வது நகர்த்தலில் போட்டி சமனிலை ஆனது. இருப்பினும் ஆனந்த், 5.5 புள்ளிகள் மட்டும் பெற்று 5வது இடம் தான் பிடிக்க முடிந்தது.

பிரான்சின் மேக்சிம் வாசியர் (6.5 புள்ளி) முதலிடம் பிடித்தார். கார்ல்சனுக்கு (5.5) 3வது இடம் கிடைத்தது.

அடுத்து கிளாசிக் முறையிலான போட்டிகள் தொடங்கின. இதன் முதல் சுற்றில் ஆனந்த், இத்தாலியின் பேபியானோ காருணாவை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய ஆனந்த், போட்டியின் 37 வது நகர்த்திலில் சமனிலை செய்தார்.