சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்யும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
குறித்த பகுதிகளில் 75mm வரையிலான மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும், கடல் பிரதேசங்களிலும் கடலை அண்மித்த பிரதேசங்களிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் மேலும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
(rizmira)