பகல் – இரவு போட்டிகளுக்கு இந்தியா அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா ) – அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அவுஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திற்கு எதிராக அஹமதாபாத்திலும் பகல் – இரவு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாடவுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2020 டிசம்பர் மாதத்திற்கும் 2021 ஜனவரி மாதத்திற்கும் இடையில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள இந்தியா, ஒரு போட்டியை பகல் – இரவு ஆட்டமாக விளையாடுவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.

மேலும், இங்கிலாந்திற்கு எதிராக 2021 ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் நடைபெறவுள்ள ஐந்து டெஸ்ட் போட்டிகளில் ஒன்றை அஹமதாபாத், மொட்டேரா, சர்தார் பட்டேல் விளையாட்டரங்கில் பகல் – இரவு போட்டியாக நடத்தவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை முடிவு செய்துள்ளது.