பகிடிவதை முறைப்பாடுகளை பதிவு செய்ய விசேட அலுவலகம்…

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதை, மாணவர் வன்முறை செயற்பாடுகள் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விசேட அலுவலகம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

அரசாங்க விடுமுறை தினங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை எட்டு மணி முதல் மாலை நான்கு மணி வரையில் இந்த அலுவலகம் திறந்திருக்கும் எனவும், பகிடிவதை சம்பவங்கள் தொடர்பாக 0112 123 700 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக 24 மணித்தியாலமும் முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கபப்டுகிறது.