நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும், பாடசாலை நேரமான காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரையான நேரத்தில் பகுதி நேர வகுப்புக்களை நடத்த தடை விதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக கல்வியமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தில் கல்வியமைச்சர் கையொப்பமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.