பக்கத்துலயே வர முடியாத அளவு தூர்நாற்றமா? இப்படி ட்ரை பண்ணுங்க…

உடல் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? கவலை வேண்டாம். இந்த பிரச்சனை உங்களுக்கு மட்டுமில்லை. பலர் இந்த உடல் துர்நாற்ற பிரச்சனையால் அவதிப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

எலுமிச்சை:
எலுமிச்சை உடலில் நறுமணம் வீச வைக்க மிகவும் சிறந்தது. எலுமிச்சையில் ஆண்டி பாக்டீரியல் தன்மை உள்ளது இது பாக்டீரியாவினால் வரும் வாய் துர்நாற்றத்தையும் போக்க வல்லது. தினமும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறை கலந்து குடித்து உங்களது அந்நாள் சிறப்பாக அமையும். உங்களது உடலில் அக்குள் பகுதி, கால்கள் போன்ற இடங்களில் துர்நாற்றம் வீசுவது தெரிந்தால், எலுமிச்சையை அந்த இடத்தில் தேய்த்து, காய்ந்ததும், நன்றாக குளிக்கவும். இதனால் உங்களது உடல் துர்நாற்றம் விலகும்.

தக்காளி:
தக்காளியில் இயற்கையான ஆன்டி பாக்டீரியல் தன்மை இருப்பதால் இது உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை ஒழிக்கிறது. தக்காளி ஜூஸை பருகுவதால் உங்களது உடலின் வெப்பநிலையானது சமநிலைக்கு வருகிறது. தினமும் அரை கப் புதிதாக தயாரிக்கப்பட்ட தக்காளி ஜூஸை பருகலாம் அல்லது புரூட் சாலட் வெஜிடபிள் சாலட்களில் தக்காளியை சேர்த்து சாப்பிடலாம். குளிக்கும் முன்னர் தக்காளியின் சாறை உடலில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். இதனால் உங்களது உடலில் துர்நாற்றம் வீசாது.

தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெய் உங்களது உடலில் நல்ல மனம் வீச வைக்க உதவியாக இருக்கிறது. இதில் ஆன்டி மைக்ரோ பையல் தன்மை உள்ளது. சிறிதளவு தேங்காய் எண்ணெய்யை எடுத்து உங்களது வாயில் ஊற்றி, அது வாயின் அனைத்து பகுதிகளுக்கும் படுமாறு செய்ய வேண்டும். அதற்காக தேங்காய் எண்ணெய்யை கொண்டு வாய் கொப்பளிக்க கூடாது. நீங்கள் துர்நாற்றம் வீசும் இடங்களில் தேங்காய் எண்ணெய்யை கொண்டு மசாஜ் செய்யலாம்.

பட்டை:
பட்டை ஒரு மிகச்சிறந்த மசாலா பொருளாகும். இது சமையலுக்கு மட்டுமல்ல, உடலுக்கு மனமூட்டவும் சிறந்தது. தினமும் ஒரு முறையாவத் பட்டை கலந்த டீயை பருகுவது சிறந்தது. டீயில் சிறிதளவு பட்டையை போட்டு பத்து நிமிடங்கள் கொதிக்க வைத்து அந்த டீயை ஆற வைத்து பின்னர் பருகலாம்.

இறுக்கமான உடைகள்:
இறுக்கமான காலணிகள், இறுக்கமான ஆடைகளை தவிர்க்கவும். தினசரி குளியல், ஒருமுறை ஆடைகளை உடுத்தியதும் துவைத்த பின்னர் மீண்டும் அணிதல், காட்டன் உடைகளை அணிவது போன்றவை உடல் துர்நாற்றத்தில் இருந்து உங்களை பாதுகாக்கும்.