பக்தாத்தில் இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் 16 பேர் உயிரிழப்பு…

ஈராக் தலைநகர் பக்தாத்தில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஈராக் தலைநகர் மத்திய பக்தாத் ஏடன் சதுக்கத்தில் பாதுகாப்புச் சோதனை சாவடி உள்ளது. இன்று(15) காலை இந்த படைத்தளத்தின் குறிவைத்து தற்கொலைப்படை தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ளதுடன் மேலும், 65-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என முதல் கட்ட தகவல்கள் வெளியாகின.

இதுதொடர்பாக, ஈராக் உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளனர்