பக்தாத் குண்டு வெடிப்பில் இதுவரை 77பேர் பலி..

ஈராக்கின் பக்தாத் நகரில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 77ஆக அதிகரித்துள்ளது.

பக்தாத்தின் கர்பலா பகுதியில் உள்ள எரிதிரவ நிரப்பு நிலையம் ஒன்றை இலக்கு வைத்து குறித்த இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் 40 பேர் வரையில் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.

பலியானவர்களின் பெரும்பாலானவர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானைச் சேர்ந்த ஷியா முஸ்லிம் யாத்திரிகர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.