பங்களாதேசுக்கு எதிரான முதல் T20 இல் வெற்றி பெற்றாலும் இலங்கை அணியினருக்கு தண்டப்பணம் விதிப்பு..

சுற்றுலா பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற முதல் T20 போட்டியில் பந்து வீச்சின் போது குறிப்பிட்ட நேரத்தில் போட்டியை நிறைவு செய்யாததால் இலங்கை அணித்தலைவர் உபுல் தரங்கவிற்கு போட்டிக் கட்டணத்தில் நூற்றுக்கு 20% தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது.

அணியின் மற்றைய வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தில் நூற்றுக்கு 10% தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(rizmira)