(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –பங்களாதேஷில் உள்ள இலங்கைப் பிரஜைகளை மீள அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பங்களாதேஷில் உள்ள இலங்கைப் பிரஜைகள் சங்கம், இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு கோரிக்கைக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.
இலங்கையில் இருப்பதன் ஊடாகவே தாம் பாதுகாப்பாக இருக்கு முடியும் என உணர்வதாகவும், இந்த நிலையில் இலங்கைக்கு வருகை தருவதற்கு அனுமதி வழங்குமாறும், பங்களாதேஷில் உள்ள இலங்கைப் பிரஜைகள் சங்கத்தின் தலைவர் அஞ்சலோ லியனகே கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே தாம் நாடு திரும்பக் கோருவதாகவும், நாட்டுக்கு வருகை தந்த பின்னர் தனிமைப்படுத்தப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இணங்குவதாகவும் பங்களாதேஷில் உள்ள இலங்கைப் பிரஜைகள் சங்கத்தின் தலைவர் அஞ்சலோ லியனகே மேலும் கூறியுள்ளார்.