பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் திசரவிடம் இருந்து சதம்…

பங்களாதேஷ் அணியுடன் இன்று(19) நடைபெறுகின்றன மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகளின் இரண்டாவது போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய சுற்றுலா இலங்கை ‘ஏ’ அணியானது 49.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 275 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதில் இலங்கை அணி சார்பில் தலைவர் திசர பெரேரா 88 பந்துகளுக்கு 111 ஓட்டங்களையும் உபுல் தரங்க 51 பந்துகளுக்கு 44 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இதன்படி, பங்களாதேஷ் அணிக்கு வெற்றி இலக்காக 50 ஓவர்களில் 276 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1:0 என்ற நிலையில் பங்களாதேஷ் அணி முன்னிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

R.Rishma