இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளை கொண்ட இருபதுக்கு 20 போட்டித் தொடரின் முதலாவது போட்டி நாளை(04) நடைபெறவுள்ளது.
இந்த போட்டிக்கான இலங்கை அணியில் இருந்து குசல் மெண்டிஸ் மற்றும் தினேஸ் சந்திமால் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், சகலத்துறை ஆட்டக்காரர் செஹான் ஜயசூரிய மற்றும் திஸர பேரேரா ஆகியோர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டி, நாளை கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இலங்கை அணி விவரம்..
உபுல் தரங்க (அணித் தலைவர்)
டில்ஷான் முனவீர
தனுஷ்க குணதிலக
குசல் பெரேரா
லசித் மாலிங்க
சந்துன் வீரக்கொடி
இசுறு உதான
நுவன் குலசேகர
தசுன் சானக
விக்கும் சஞ்சய
மிலிந்த சிறிவர்தன
அசேல குணரத்ன
சீக்குகே பிரசன்ன
சாமர கபுகெதர
திசர பெரேரா
லக்ஷான் சந்தகன்
ஷெஹான் ஜெயசூரிய