பங்களாதேஷ் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளரான ஷந்திகவின் ஒப்பந்த காலம் நீடிப்பு

பங்களாதேஷின் கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வரும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷந்திக ஹதுருசிங்கவின் ஒப்பந்த காலம் மேலும் 3 வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அவர் 2019 ஆம் ஆண்டு வரையில் பங்களாதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளாராக செயற்படுவார்.

ஷந்திக ஹதுருசிங்க பங்களாதேஷ் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக கடந்த 2014ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.