பங்களாதேஷ் அணி வீரர்களுக்கு அபராதம் விதித்தது ICC – ஜோஸ் பட்லருக்கு மட்டும் விதிவிலக்கு.. (VIDEO)

பங்களாதேஷ் அணிவீரர்கள்  Mashrafe Mortaza மற்றும்  Sabbir Rahman க்கு போட்டியில் 20% வரை  அபராத தொகையை சுமத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தீர்மானித்துள்ளது.

பங்காளதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோஸ் பட்லர் ஆட்டமிழந்ததை தொடர்ந்து குறித்த இருவரினதும் செயற்பாடுகளினால் இந்த அபராதம் விதிக்கப்படவுள்ளது.

இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோஸ் பட்லர் ஆட்டமிழந்ததை தொடர்ந்து  அந்த மகிழ்ச்சியை பங்களாதேஷ் அணிவீரர்கள்  கொண்டாடிய போது பட்லர் கோபமடைந்துள்ளார்.

இதன்போது அவருக்கும் பங்காளதேஷ் அணி வீரர்களுக்கும் இடையே சூடான வாக்குவாதம் இடம்பெற்றது.

இதன்போது நடுவர்கள் தலையிட்டு அதனை  சமரசப்படுத்தினர்.

எனினும் அந்த போட்டியில் பங்களாதேஷ் அணி 34 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

வாக்குவாத காணொளி;

[youtube url=”https://www.youtube.com/watch?v=z4zSxXHjm5E” width=”560″ height=”315″]