பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வீரர் சபீர் ரஹ்மானுக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட 6 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த இத்தடையானது இந்த வருடம் ஜூன் மாதம் வரை நீடிக்கும். ஆதலால் அவர் எந்த பங்களாதேஷ் போட்டிகளிலும் விளையாட முடியாது.
மேலும் அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த 6 மாதத்திற்குள் அவர் 1 கோடி ரூபா பணம் கொடுக்க வேண்டும் என்று பங்களாதேஷ் கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.
சபீர் ரஹ்மான் தொடர்ச்சியாக நடுவர்களை திட்டி வருவதாகவும், ஒவ்வொரு முறையும் சிறிய தொகை அபராதம் அளிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த வாரம் நடந்த தேசிய போட்டி ஒன்றில் மீண்டும் இதே தவறை அவர் செய்திருக்கிறார். ஆனால் இந்த முறை அவர் நடுவரிடம் மட்டும் தவறாக நடந்து கொள்ளாமல் அங்கு இருந்த ரசிகர் ஒருவரிடமும் சண்டையிட்டிருக்கிறார். மேலும் களத்தில் நடுவரை மோசமாக திட்டி இருக்கிறார்.
இவரின் இந்த செயலை பார்த்த பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அணியிலிருந்து அவரை நீக்கி இருக்கிறது. மேலும் 6 மாதம் கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளது. அபராதமும் விதித்துள்ளது. இந்த அபராத தொகையை தண்டனை காலம் முடிவடைவதற்குள் கட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
சபீர் அதே இடத்தில் மன்னிப்பு கேட்டு அழுத சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
#reeshma