2013ஆம் ஆண்டு இடம்பெற்ற பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டிகளில், ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 05 ஆண்டுகள் போட்டித் தடை விதிக்கப்பட்ட பங்களாதேஷ் அணி வீரர் மொஹமட் அஸ்ரபுல் மீளவும் சர்வதேச அணிக்கு திரும்ப வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, எதிர்வரும் 13 ஆம் திகதியுடன் அவருக்கான தடை நீங்குகின்றது. இந்நிலையில் போட்டித் தடைக் காலம் நிறைவடைந்துள்ள நிலையில், பங்களாதேஷ் அணியில் மீண்டும் இடம் கிடைக்கும் என மொஹமட் அஸ்ரபுல் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எனினும் 2016ஆம் ஆண்டில் இருந்து அவர் உள்ளுர் போட்டிகளில் பங்குபற்ற அனுமதி அளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.