பங்களாதேஷ் நாட்டில் கடும் மழை, நிலச்சரிவால் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் மியான்மர் எல்லையில் உள்ள சில மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தொடர் மழையின் காரணமாக இஸ்லாம்பூர், புரிகாட், அம்டோலி, ஹத்திமாரா, போரோகுல்பாரா, சாரைபாரா பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு உள்ளன.
இந்த மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக மியான்மரில் இருந்து அகதிகளாக வந்து உள்ள பல்லாயிரக்கணக்கான ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.