பங்களாதேஷில் நடைபெறும் முக்கோண ஒருநாள் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இன்று மோதவுள்ள நிலையில், இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால்;
“.. இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் தங்களது நிலைமையை உணர்ந்து செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பங்களாதேஷ் அணியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட பல வீரர்கள் இருக்கின்றனர்.
அவர்களே அணியின் பலமாக இருக்கிறார்கள். இதன் ஊடாகவே பங்களாதேஷ் அணி தற்போது சிறந்த அணியாக இருக்கிறது. அவ்வாறான வாய்ப்பு இலங்கை அணிக்கு இல்லை.
இலங்கை அணியின் முக்கிய வீரர்கள் அடிக்கடி காயமடைவதால், அணியின் சமநிலையும் அதிகம் பாதிக்கப்படுகிறது…” என சந்திமால் சுட்டிக்காட்டியுள்ளார்.
#rishma