பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இன்று(06) இடம் பெறவுள்ள T20 போட்டியில் விளையாட்டரங்கை சேதப்படுத்தும் ரசிகர்ளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இதனிடயே, நாட்டில் உள்ள பிரச்சினைகளை விளையாட்டரங்கிற்கு கொண்டு வருவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹன் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற முதலாவது T20 போட்டியில் பல்கலைக்கழக மாணவர்கள், மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து டி – சர்ட் அணிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இன்றைய தினமும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவிக்க தயார் நிலையில் உள்ளதாக தெரிய வந்துள்ளது
எனினும் இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எந்த ஓர் நபர் விளையாட்டரங்கில் இருந்தாலும் அவர்களை உடனடியாக வெளியேற்றுமாறு விளையாட்டரங்கு பாதுகாப்பு பிரிவிடம் வேண்டப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.