பங்களாதேஸ் பாரிய ஒன்லைன் மோசடியுடன் தொடர்புடைய எட்டு பேர் இலங்கையர்கள்

பங்களாதேஸில் இணையத்தின் ஊடாக இடம்பெற்ற பாரிய நிதி மோசடியுடன் எட்டு இலங்கையர்களுக்கு தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பங்களாதேஸ் மத்திய வங்கியில் இருந்து 10 மில்லியன் டொலர்கள் இணையத் திருட்டு தொடர்பாக இலங்கையின் 8 பேரும் பிலிப்பைன்ஸின் 12 பேரும் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஸ் விசாரணையாளர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
எனினும் இணையத் திருட்டை மேற்கொண்டவர்களுக்கு இந்த பணத்தின் தொகை சென்று சேரவில்லை என்று நம்பப்படுகிறது.
இந்த இணையத் திருட்டுஇ கடந்த பெப்ரவரி 4ம் மற்றும் 5ம் திகதிகளில் இடம்பெற்றுள்ளது.