(ஃபாஸ்ட் நியூஸ் | பதுளை) – பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை – மடுல்சீமை பிரதான வீதியின் 6ம் கட்ட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50ற்கும் மேற்பட்டோர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று (06) மாலை 05 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பசறை பகுதியிலிருந்து கெக்கிராவ பகுதிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.